logo
புதுக்கோட்டை அருகே இம்னாம்பட்டி கிராமத்தில் குடிநீர் விற்பனை செய்யும் வாகனத்தை மக்கள் சிறைபிடித்து தர்னா

புதுக்கோட்டை அருகே இம்னாம்பட்டி கிராமத்தில் குடிநீர் விற்பனை செய்யும் வாகனத்தை மக்கள் சிறைபிடித்து தர்னா

26/May/2021 10:30:43

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அருகே இம்னாம்பட்டி கிராமத்தில் குடிநீர் விற்பனை செய்யும் வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட   இம்னாம்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த ஆறு கிராமங் களுக்கும் இம்னாம்பட்டி கிராமத்திற்கு பஞ்சாயத்து மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் குடிநீர் போர்வெல் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கப் பட்டு வாகனங்கள் மூலம்  புதுக்கோட்டை முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 இதனால் அக்கிராமத்தில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை சிறைபிடித்தனர் கடந்த 4  வருடங்களாக இதுபோன்று குடி நீர் நிலத்தடி நீரிலிருந்து உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 இதனை தடுத்து நிறுத்தக்கோரி அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பலமுறை வட்டாட்சி யர் மற்றும் ஊராட்சித் தலைவரி டம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத தை கண்டித்து ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் குடிநீர் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினர் அவர்களி டம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர் இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Top