30/Jul/2021 06:20:36
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கவிதா ராமுவழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழக மக்களின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் (29.07.2021) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,287 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.2,37,915 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,150 வீதம் மொத்தம் ரூ.57,500 மதிப்பீட்டில் நடை பயிற்சி உபகரணங்களும் என மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,95,415 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா பேருந்து பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகளும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
கோவிட் தொற்றில் இருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கோவிட் தடுப்பூசி தவறாது செலுத்தி கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ரார் அவர்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.