logo
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: ஈரோட்டில் 726 பேருக்கு ரூ.5.53 கோடியில் உதவிகள் வழங்கிய எம்எல்ஏ-க்கள்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: ஈரோட்டில் 726 பேருக்கு ரூ.5.53 கோடியில் உதவிகள் வழங்கிய எம்எல்ஏ-க்கள்

14/Feb/2021 06:51:34

ஈரோடு, பிப்: ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனானிகள்  726 பேருக்கு ரூ.5.53 கோடி மதிப்பிலான  நலத் உதவிகளை எம்எல்ஏக்கள் கே.வி. இராமலிங்கம், கேஎஸ். தென்னரசு ஆகியோர்  வழங்கினர்.

 எளிய குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம்   8 கிராம் தங்கமும், உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதில்  பிளஸ்-2 படித்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களில் ஏற்கெனவே திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஈரோடு பழையபாளையத்தில் சனிக்கிழமை(பிப்.13) நடைபெற்றது.

 விழாவுக்கு ஈரோடு வருவாய்கோட்டாட்சியர் சைபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான  கே.வி.ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 726 பேருக்கு மொத்தம் ரூ.5 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 810 மதிப்பில் தங்கமும், உதவித்தொகையும் வழங்கினர். மேலும் 100 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும், 100 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட்டன.

இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அதிமுக பகுதி செயலாளர் சூரம்பட்டி ஜெகதீசன், பெரியார்நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Top