logo
  நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும்: சிவகங்கை எம்பி -கார்த்தி சிதம்பரம் பேட்டி

நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும்: சிவகங்கை எம்பி -கார்த்தி சிதம்பரம் பேட்டி

25/May/2021 08:40:10

புதுக்கோட்டை, மே: தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு   சிவகங்கை எம்பி -கார்த்தி ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு செய்தார் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கார்த்தி சிதம்பரம் கேட்டறிந்தார்.


இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: 

 தேசிய கல்விக்கொள்கை பாஜக மட்டும் தான் ஏற்றுக் கொண்டுள்ளது ஹிந்தியைவளர்ப் பதற்காக  தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பு ஊசி தான் ஒரே வழி.தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான விளைவும் ஏற்படுவது கிடையாது. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது.தடுப்பூசி போடுவது பொது மக்களிடையே மிகப் பெரிய குழப்பம் தயக்கம் உள்ளது.

அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்க ட்சி கள் கடந்த காலங்களில் தடுப்பூசி குறித்து சந்தேகங்களை எழுப்ப வில்லை ஆனால் அப்போதே தடுப்பூசி குறித்து பொதுமக் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்தது குறித்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன.

நீட் தேர்வால் கடந்தகாலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாத சூழ்நிலை இருந்தது ஆனால் தற்போது அரசு பள்ளி மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது .அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால் நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெற வேண்டுமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் சாதக பாதகங்கள் அதிகம் உள்ளன.

தமிழக அரசு வருவாயை பெருக்குவதற்கு அரசு லாட்டரி சீட்டு மீண்டும் கொண்டு வரவேண்டும்.லாட்டரி சீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.லாட்டரி சீட்டு நடத்துவதால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்று விவாதங்கள் வரும் ஆனால் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 டிக்கெட் மட்டுமே என்று வரைமுறைப்படுத்த வேண்டும்.

 இது  அரசிற்கு நான் விடுக்கும் கோரிக்கை. இதனை விவாதித்து முடிவு எடுக்கலாம் விவாதம் நடத்தினால் தான் எதற்கும் தீர்வு கிடைக்கும்.புதுபுது உத்திகளை கையாண்டால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும்.பொதுவாழ்வில் இருப்பவர்கள் யோசனைகள் கூறத்தான் செய்வார்கள் விவாதம் செய்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் கார்த்தி சிதம்பரம்.

இதைத்தொடர்ந்து   ஆலங்குடி அரசு மருத்துவமனை, வடகாடு அரசு|ஆரம்ப சுகாதார நிலையம், நெடுவாசல் கிழக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொத்தமங்கலம் கிழக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெண்ணவால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்துப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வல்லத்திராக் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய  இடங்களில்  ஆய்வுமேற்கொண்டார்.

 இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக 10.ஆயிரம் மாஸ்க்குகள் மேற்கண்ட சுகாதார நிலயங்களுக்கும், பொதுமக்களுக்கும்  வழங்கப்பட்டது. இதில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னாள் எம்எல்ஏ-ராமசுப்புராம் உள்பட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top