logo
தொடர்ந்து எகிறும்  பெட்ரோல் விலை...ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு .91.94 -க்கு விற்பனை. வாகன ஓட்டிகள் வேதனை

தொடர்ந்து எகிறும் பெட்ரோல் விலை...ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு .91.94 -க்கு விற்பனை. வாகன ஓட்டிகள் வேதனை

16/Feb/2021 10:10:40

ஈரோடு, பிப்:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையை தினம்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 8-ஆம்  தேதியில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறும் முகத்திலேயே இருந்து வருகிறது.இன்றைய சூழ்நிலையில், இரு சக்கர வாகனங்கள்  இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு  வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.  ஆனால், பெட்ரோல் டீசல் ,விலை உயர்ந்து கொண்டே வருகிறது.இதனால் நடுத்தர வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

ஈரோட்டிலும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. திங்கள்கிழமை ஒரு  லிட்டர் பெட்ரோல்  விலை ரூ.91.68 காசுக்கு விற்கப்பட்டது. புதன்கிழமை   26 காசுகள் உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.91.94 காசுக்கு விற்கப்படுகிறது. இதைப்போல் டீசல்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.94 விற்கப்பட்ட டீசல்  புதன்கிழமை  லிட்டருக்கு 33 காசு உயர்ந்து ரூ.85.27 - க்கு விற்கப்படுகிறது. 

இன்னும் ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் தாண்டினால் வியப்பளிப்பதற்கு ஒன்றுமில்லை. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் சிறு, குறு வியாபாரிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விலை ஏற்றத்தை  மத்திய மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top