logo
கந்தர்வகோட்டையில் நடமாடும் காய்கனி விற்பனை: எம்எல்ஏ-சின்னத்துரை தொடங்கி வைத்தார்

கந்தர்வகோட்டையில் நடமாடும் காய்கனி விற்பனை: எம்எல்ஏ-சின்னத்துரை தொடங்கி வைத்தார்

24/May/2021 12:56:44

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அரசு நடமாடும் காய்கனி, பழங்கள் விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு மே 24 முதல் தளவுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. பாலகம், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட ஒருசில அத்தியாவதிய நிறுவனங்கள் மட்டுமே இயங்கும். இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காய்கறி கிடைக்காமல் அவதிப்படக்கூடாது என்பதற்காக கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதனடிப்படையில் கந்தர்வகோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நடமாடும்காய்கறி, பழங்கள் விற்பனையை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top