24/May/2021 10:34:04
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.அம் மருத்துவமனைக்கு தேவையான கிருமிநாசினிகள், கையுறைகள்,தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்சி மீட்டர்,நோயாளிகளுக்கு தேவையான பழங்கள் ஆகியவற்றை இலுப்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஸ்டாலின்,அரசுப்பள்ளி ஆசிரியர் ஆனந்த்குமார்,மற்றும் சமூக சேவகர் முரளிதரன் ஆகியோர் மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்மணியிடம் திங்கட்கிழமை ஒப்படைத்தனர்.
இந்த மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான
நிதியை
வெளிநாடுவாழ் தமிழர்கள் பிரகாஷ் கஸ்தூரிரங்கன்,கணேஷ்
ராஜ் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை வெளிநாடுவாழ் தமிழர்
இலண்டன் பிரகாஷ் செய்திருந்தார்.