logo
ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த  கணவன்-மனைவி கைது: 232 கிலோ பறிமுதல்

ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன்-மனைவி கைது: 232 கிலோ பறிமுதல்

23/May/2021 10:07:00

ஈரோடு, மே : ஈரோட்டில் வீ்ட்டில் கஞ்சா பதுக்கிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து, 232 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 ஈரோடு சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்ததுஇதன்பேரில், ஈரோடு தாலுகா போலீசார் சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கோல்டன் சிட்டியை சேர்ந்த மணி மகன் கேசவன்(34) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேசவன் மற்றும் அவரது மனைவி பிருந்தா(24) ஆகியோரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் இருவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை. கடந்த ஒன்றரை ஆண்டாக கோல்டன் சிட்டியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது..

ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ரயில், சரக்கு வாகனங்களில் சேலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஈரோட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கேசவன், பிருந்தாவை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 232.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Top