logo
ஸமார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு பேருந்து நிலையத்தில் ரூ. 29.50 கோடியில்  விரிவாக்க பணிகள் தொடக்கம்

ஸமார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு பேருந்து நிலையத்தில் ரூ. 29.50 கோடியில் விரிவாக்க பணிகள் தொடக்கம்

26/Jan/2021 08:10:29

ஈரோடு, ஜன:  ஈரோடு    மாவட்டத்தில்     ஸ்மார்ட்சிட்டி   திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட  ஈரோடு  பேருந்து நிலையத்தை பஸ் நவீன முறையில் மேம்படுத்துவதற்காக  ரூ.14.70 கோடியும்,  பேருந்து நிலையத்தின்  சுற்றுப்புற மேம்பாட்டுப் பணிகளுக்காகரூ.9.30 கோடியும், சிற்றுந்துகள் நிறுவதற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5.50 கோடி என மொத்தம் ரூ.29.50 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான  பூமிபூஜை  நடந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில்  ஆட்சியல் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  எம்எல்ஏ-கே.எஸ்.தென்னரசு  முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்புஅழைப்பாளராக   கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


பின்னர்    அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  அவர் கூறியதாவது: பிப்ரவரி  மாதம் முதல்  9 -ஆம்   வகுப்பு  மற்றும் 11-ஆம்    வகுப்புகள்   திறப்பது   குறித்து   தமிழக முதல்வர் தான் முடிவுசெய்வார்.    சில பள்ளிகளில் கொரோனோ தாக்கம் உள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறு. இரண்டுஆசிரியர்களுக்கு  மட்டும் சோதனை எடுத்துள்ளனர். மேலும்ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில்  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படிப்படியாக பணிகள் வழங்கப்படும்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காலிப்பணியிடங்களை விட தேர்வானவர்கள்   கூடுதலாக இருக்கும் பட்சத்தில் தேர்வாணையத்தின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

கொரோனோ   தடுப்புஊசி    முதற்கட்டமாக  சுகாதாரபணியாளர்களுக்குபோடப்பட்ட பிறகு அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் போடப்படும்.

உடற்கல்வி ஆசிரியர்களை பொறுத்தவரையில் இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டனர்.புதிதாக உள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் ஒரு அட்டவணை வெளியிட உள்ளோம் அதற்கு ஏற்ப எந்த அளவு பணியிடங்கள் உள்ளதோ  அதற்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்.

என கூறினார். இதில் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, முன்னாள் துணை மேயர்கள் மல்லிகா பரமசிவம், கே. சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டிஜெகதீஸ்,  தங்கமுத்து, முருக சேகர், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி  உள்பட  பலர் கலந்து கொண்டனர். 


Top