logo
சத்தியமங்கலம் அருகே கோயிலில் வடமாநில இளைஞர் சடலம்:  அடித்து கொலையா? போலீஸார் விசாரணை

சத்தியமங்கலம் அருகே கோயிலில் வடமாநில இளைஞர் சடலம்: அடித்து கொலையா? போலீஸார் விசாரணை

21/Feb/2021 08:44:08

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல்நிலையம் பின்புறம் பவானி ஆற்றங்கரையோரத்தில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. 

கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல்  பூஜை செய்வதற்காக  பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் முன்புறம் வடமாநில இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்தவர் சுமார் 21 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் என்பதும் இளைஞரின் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்துள்ளது. 

பிரேதத்தை கைப்பற்றிய சத்தியமங்கலம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் கொலை செய்த நபர் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதையும்  அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Top