logo
கீழ்பவானி கால்வாயிலில் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து  பெருந்துறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயிலில் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து பெருந்துறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

07/Mar/2021 06:27:00

ஈரோடு, மார்ச் : ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தொலைவுக்கு ரூ.740 கோடி மதிப்பீட்டில்   கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு இதற்கான பணிகளை பிரதமர் மோடி  அண்மையில் தொடங்கி வைத்தார்.


இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம்  ஏக்கர் பாசன வசதி பெற்று வந்த நிலையில் கால்வாயில் கான்கீரிட் தளம் அமைப்பதால் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி கீழ்பவானி பாசன பாதுகாப்பு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  பெருந்துறை  பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட  300 -க்கும் மேற்பட்ட  விவசாயிகள்  கீழபவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும்  திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி  முழக்கமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top