logo
கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

21/May/2021 08:17:22

திருச்சி, மே: கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் என்றார் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்.

 திருச்சியில் முதல்வர் மு..ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன்.கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. . சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது.

தமிழகத்திலுள்ள 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதுகலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2-து தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மே 2-ஆம்  தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்..க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

 

.

Top