logo
 காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரை மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது:  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்தகவல்

காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரை மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்தகவல்

27/Jun/2021 10:49:45

புதுக்கோட்டை, ஜூன் காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரை மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், வடக்கு புதுக்குடியை சேர்ந்த  மீனவர் வசீகரன் என்பவர் நேற்றையதினம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போனதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை  அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் (27.06.2021) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து தற்காலிக நிவாரணமாக ரூ.50,000 - தொகையை வழங்கினார்.


பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், வடக்கு புதுக்குடியை சேர்ந்த தினமணி என்பவரது மகன் மீனவர் வசீகரன் சனிக்கிழமை காலையில் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது தவறி விழுந்து காணாமல் போய் விட்டார்.

முதலமைச்சரின்  அறிவுறுத்தலுக்கிணங்க மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் வசீகரனை மீட்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கடலோர காவல் படையினரும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். காணாமல் போன மீனவர் வசீகரனை மீட்பதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது படகு மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்ற பின்பு சென்ற வாரம் வெளியிட்ட ஆளுநர் அறிக்கையில் படித்த வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மேலும் பொருளாதார மேதைகள் கொண்ட குழுவினை யும் அமைத்துள்ளார்கள்.

அந்த வகையில் தமிழக அரசின் வருமானத்தை பெருக்கி பல்வேறு தொழிற்சாலைகள் அரசுத்துறை மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் ; தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கண்டிப்பாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்றார் அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) குமரேசன் மற்றும் சக்தி ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top