logo
புதுக்கோட்டை  அருகே லெக்கனாபட்டியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை அருகே லெக்கனாபட்டியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

22/Apr/2021 10:04:21

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை அருகே லெக்கனாபட்  அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்  சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில்   கிராம மக்களுக்கு   முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் , குளத்தூர் அருகே உள்ள லெக்கனாபட்டி  அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமையில் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இணைந்து  கொட்ட பள்ளம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு  பிரசாரம் செய்தனர். வீட்டைவிட்ட வெளியில் செல்லும் போது முகக்கவசம்  அணிந்து செல்லவேண்டும்.

 கையில் கிருமி நாசினி தெளித்து சமூக இடைவேளை பின்பற்றி செல்ல வேண்டும்  என்பன உள்ளிட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியதுடன் பொது மக்கள் அனைவருக்கும் முக கவசம் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கினர்.

இதேபோன்று அப்பகுதியில் குளத்துக் கரையில் நடைபெற்ற 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டது மேலும் முக கவசம் அணிவதினால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதையும் பெண்களிடம்  விளக்கிக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Top