logo
 முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியளிப்பு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியளிப்பு

10/Jun/2021 10:17:30

அறந்தாங்கி, ஜூலை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜீ.வெங்கட்ராமன் வெளியிட்ட தகவல்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் ஓய்வின்றி உழைக்கும் சூரியனாய் மாவட்டந்தோறும் நேரடியாக சென்றும் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களை களப்பணியாற்றிட அறிவுறுத்தியும் கோவிட்டிற்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்றி வருவதை எங்கள் சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் .

சுமார் 4,500 தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் வழங்குதல் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 11,500  பேருக்கு மாதாந்திர உதவி தொகை, சிறப்பு காலணிகள் வழங்குதல் உள்ளிட்ட தொழுநோய் தடுப்பு பணிகளோடு

மாநிலம் முழுதும் காச நோய், கோவிட் தடுப்பு பணிகளிலும் எங்கள் சங்க உறுப்பினர்கள் ஈடுப்பட்டு வருவதை தங்க ளின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தங்களின் மகத்தான மக்கள் பணியில் எங்கள் சங்கத்தின் பங்களிப்பாக ரூ.50,000 - தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Top