logo
புதுக்கோட்டையில் முழு முடக்கத்தை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை

புதுக்கோட்டையில் முழு முடக்கத்தை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை

19/May/2021 07:13:40

புதுக்கோட்டை பொன்னமராவதி.மே: புதுக்கோட்டை நகரில் முழுமுடக்கத்தை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து  கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தாக்கம் குறையாததால் தமிழகத்தில் கடந்த 10 - ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும்  மக்கள் வாகனங்களில் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர். போலீசார் நிறுத்தி காரணம் கேட்டால் ஏதாவது காரணங்களைச்  சொல்லி செல்வது தொடர்ந்தது

இதையடுத்து முழு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும். குறிப்பாக ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதுஇதையடுத்து கடந்த 2 நாள்களில் 157 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,   முழு முடக்கம் தீவிரப்படுத்தப்பட்டு  மருந்துக்கடைகள், உணவகங்கள் தவிர அனைத்து கடைகளுக்கும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல்  சில வணிக நிறுவனங்கள்  விதிமுறைகளை மீறி  மறைமுகமாக வியாபாரம் செய்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு  புகார்கள் சென்றன.

இதில், புதுக்கோட்டை நகரில் சாந்நாதர் கோயில் சந்நிதி வீதியில் உள்ள பாத்திரக் கடை, ஜவுளிக்கடை கடைகள் ஊரடங்கு  விதிகளை மீறி கடைகளை திறந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நோய்தொற்று பரவக்கூடிய சூழ்நிலை யிலும் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற புதுக்கோட்டை கோட்டாட்சியர்  டெய்சி குமார், தாசில்தார் முருகப்பன், காவல்துறையினர் உள்ளிட்டோர் விதிகளை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

அதேபோல், வீட்டிற்குள்ளேயே செல் போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வந்த ஒரு கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து அவருக்கு ரூ. 5 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டது

தொடர்ந்து, தமிழக அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் இது போன்று கடைகள் திறந்து விற்பனை செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர்  டெய்சி குமார் எச்சரித்தார்  புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து  3  கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னமராவதியில் விதிமீறலில் ஈடுபட்ட  கடைக்கு சீல் வைப்பு : இலுப்பூர்  வருவாய் கோட்டாட்சியர்  தண்டாயுதபாணி அதிரடி.

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கொரோனோ வீதி முறைகளை மீறி பொன்னமராவதி கிழக்கு வட்டம் தேர்முட்டி வீதியில் அனுமதியின்றி காலை 10 மணிக்கு மேல் கடை திறந்து வியாபாரம் செய்தும் மற்றும் முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மளிகை கடையை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில்

வட்டாட்சியர் ஜெயபாாரதி,வருவாய் ஆய்வாளர் ஜோதி ஆகியோர்  சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

                                                   

Top