logo
புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசங்கள் வழங்கல்

புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசங்கள் வழங்கல்

03/Jun/2021 09:32:33

புதுக்கோட்டை, ஜூன்: புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஏவிஎம் டயாக்னோஸ்டிக்  நிறுவனம் சார்பில்   அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை   அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் (3.6.2021) வியாழக்கிழமை சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற    நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா பங்கேற்று மருத்துவமனையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள N-95 முக கவசங்களை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் பூவதியிடம்  வழங்கினார்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பஷீர் முகமது, முன்னாள் தலைவர்கள் அந்தோணிசாமி, ஜி.எஸ்.எம். சிவாஜி, ராதாகிருஷ்ணன் போக்குவரத்து கழக பொறியாளர் சோமசுந்தரம், அகிலா சுரேஷ், மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி,  எம்.எம்.பாலு  மற்றும்   ரோட்டரி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை  ஏவிஎம் டயக்னோஸ்டிக் சென்டர் உரிமையாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர் ஜெய் பார்த்தீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

Top