logo
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சார்பில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சார்பில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

09/Jun/2021 05:58:21

கரூர், ஜூன்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வெளிநாட்டு வாழ் நண்பர்கள் நிதியுதவி மூலம்  மருத்துவமனைகளுக்கு  5  ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக  கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் / மாவட்ட  நீதிபதி எம். கிறிஸ்டோபர் வெளியிட்ட தகவல்:

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் மக்களை பாதித்துக் கொண்டிருக்கிற நிலையில் மக்கள் தங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக ஆக்சிஜன் செறிவூட்டி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் இயங்கி வரும் தோகைமலை, பஞ்சப்பட்டி, வெள்ளியணை, சின்னதாராபுரம்  மற்றும் வாங்கல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில்  ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், ஊரகப் பகுதியில் வாழும் ஏழைமக்கள் பயன்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி  கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூரில் வாழும் ராமசந்திரன், ரங்கசாமி மற்றும் அவர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி உதவியுடன்  5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஏற்பாடு செய்து அவற்றை தோகைமலை, வெள்ளியணை, பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்திக்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர்மாவட்ட  நீதிபதி எம். கிறிஸ்டோபர்  தெரிவித்துள்ளார்

Top