logo
அறந்தாங்கி  அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

18/May/2021 11:09:55

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆய்வு செய்தார். இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு  வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் மருத்துவமனையில் உள்ள  சமையல கூடத்துக்கு நேரில் சென்ற ஆட்சியர் அங்கு சமைக்கும்  உணவுகளின் தரத்தை  ஆய்வு செய்தார்.

அதில், சார்- ஆட்சியர்  ஆனந்த்மோகன், துணை இயக்குநர்(பொது சுகாதாரம்) விஜயகுமார், தலைமை மருத்துவர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Top