logo
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்

12/May/2021 04:32:32

புதுக்கோட்டை, மே:  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்வுக்கு,  தலைமை மருத்துவர் மு.பெரியசாமி தலைமை  வகித்தார் செவிலியர் கண்கா ணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். 

செவிலியர் உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.கொரானாகாலத்தில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு புகழ் மாலை சூட்டும் வகையிலும், தியாகத்தை போற்றும் வகையிலும்  மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் செவிலியர் கண்காணிப்பாளர்  ஜெயந்தி சார்பில் மருத்துவமனைக்கு 10,000 மதிப்புள்ள நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இதில், தலைமை மருத்துவர் மு.பெரியசாமி பேசுகையில்,  ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை யாரின் பிறந்ததினமான (மே10) உலக செவிலியர் தினமாகக்கொண்டாடப்படுகிறது. செவிலி யர்கள் என்பவர்கள் தாய்க்கு நிகரானவர் ஆகவேதான் நாம் அவர்களை செவிலித் தாய் என்கி றோம்.

மனிதர்கள் நோயால் துன்பப்படும்போது அந்தத்துன்பத்தை  டைத்து தூய்மையாக்குபவர்கள் செலிவியர்கள்தான். ஆகவேதான் அமைதியையும் அன்பையும் குறிக்கும்  வெள்ளை  நிற ஆடை யை செவிலியர்கள் அணிகின்றனர். ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் விரைவில் குணமடைவதற்கு முழுகாரணம்  பொறுமை,தியாகம்,சகிப்புத்தன்மை, சாந்தகுணம் கொண் ட  செவிலியர்களின் தன்னிகரில்லா சேவைதான். 

உலக செவிலியர் தினத்தின்  இந்த(2021) வருடத்தின் கருத்தாக எதிர்கால ஆரோக்கியம்மே நம் லட்சியம் ( A Voice to Lead-A Vision for Future Health care) என்று கூறியுள்ளது. இந்த நாளில் தமிழக அரசு கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள  மருத்துவர், செவிலியர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி பாராட்டுகிறேன் என்றார்.

இதில், மருத்துவர்கள் விவேக்ராஜ்,மார்சல்,மணிவண்ணன்,சிவசங்கரி,கீதா,செவிலியர்கள், வேலுமணி, செல்வகுமாரி, சசிரேகா மற்றும் அனைத்து செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முடிவில் மோனாபாய் நன்றி கூறினார்.

Top