logo
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு   நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.1  கோடி   வழங்கினர்

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.1 கோடி வழங்கினர்

13/May/2021 09:31:04

 சென்னை: கொரோனா பேரிடரை  எதிர்கொள்ள  முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.1 நிதி  வழங்கினர். இதைப் போல, விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1.25 கோடி நிதி வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடரை  எதிர்கொள்ள  முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு  தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றின் இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பின்மீதும் மக்கள்மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத இந்தச் சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு  அமைப்பினர், திரையுலக பிரபலங்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  நிதியளித்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் ரூ.1கோடி நிதியுதவி:

திரைப்பட நடிகர் சிவகுமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர்  ராஜசேகர்பாண்டியன் ஆகியோருடன்  சென்று முதல்வர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதியை வழங்கினர்.

 விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 1.25 கோடி  நிதியுதவி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி வேலூர் மற்றும் விஐடி சென்னை பேராசிரியர்கள்ஊழியர்களின்  ஒரு நாள் சம்பளம் மற்றும் விஐடி நிர்வாகம் சார்பில்  1.25 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் (மின்னனு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டினை ) விஐடி பதிவாளர் டாக்டர். கே.சத்திய நாராயணன் வழங்கினார். உடன் விஐடியின்  நிலையான ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


இது குறித்து  விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் கூறுகையிலகொரோனா நோய் தடுப்பதற்க்கும், சிகிச்சை யளிப்பதற்கும் விஐடி நிர்வாகம் அரசாங்கத்திற்கு  தேவையான உதவிகளை செய்ய  தயாராக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக விஐடி வேலூர் வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்ளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்க்கு 1000 படுக்கைகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

 

 

Top