logo
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசுப்போட்டி

27/Jun/2021 12:48:07

சென்னை, ஜூன்: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும்  திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டிக்கு, 2020-ஆம் ஆண்டில்  (1.1.2020 முதல் 31.12.2020 ) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30,000 - அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ 10,000 என பரிசுகள் வழங்கப்பெறும்.

வகைப்பாடுகள்

1. மரபுக் கவிதை 2. புதுக் கவிதை, 3.புதினம் ,4. சிறுகதை , 5.நாடகம் (உரைநடை கவிதை), 6.சிறுவர் இலக்கியம், 7.திறனாய்வு

8.மொழி வரலாறு, மொழியியல் மொழி வளர்ச்சி, இலக்கணம்,9. பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், 10.நுண்கலைகள்( இசை, ஓவியம், நடனம், சிற்பம்) 11. அகராதி கலைக் களஞ்சியம் கலைச் சொல்லாக்கம்ஆட்சித் தமிழ்.

12. பயண இலக்கியம் 13.  வாழ்க்கை வரலாறு தன் வரலாறு, 14. நாட்டு வரலாறு, கல்வெட்டு தொல்லியல். கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு.  15. கணிதவியல் வானியல் இயற்பியல், வேதியியல்.  16.பொறியியல் தொழில் நுட்பவியல்.

17. மானிடவியல், சமூகவியல் புவியியல் நிலவியல் .  18.சட்டவியல் அரசியல் .19. பொருளியல் வணிகவியல். மேலாண்மையியல். 20. மருந்தியல், உடலியல் நலவியல் .21.தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம் ஆயுர்வேதம்). 22.சமயம், ஆன்மீகம், அளவையியல்.  23.கல்வியியல் உளவியல் .24.வேளாண்மையியல் கால்நடையியல் .

25.சுற்றுப்புறவியல். 26.கணினி இயல் . 27.நாட்டுப்புறவியல். 28.வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்.  29. இதழியல் தகவல் தொடர்பு. 30. பிற சிறப்பு வெளியீடுகள். 31.விளையாட்டு. 32.மகளிர் இலக்கியம். 33.தமிழர் வாழ்வியல்

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிட்ட முகவரியிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ இலவசமாக   (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அஞ்சல் வாயிலாகப் பெற 23 x 10 செமீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பிபெற்றுக் கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம்ரூ.100.  இத்தொகையை தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை  என்ற பெயரில் வங்கிக்கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும்.

 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள். 31. 8. 2021.

 அனுப்பவேண்டிய முகவரி:

 தமிழ் வளர்ச்சி இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்.

தமிழ்ச்சாலை, எழும்பூர் சென்னை- 600 008,

தொலைபேசி எண்கள்: 044-28190412 / 28190413 .

 

Top