logo
கொரோனா கண்காணிப்பு அதிகாரி  கே.கோபால் ஈரோட்டில் ஆய்வு

கொரோனா கண்காணிப்பு அதிகாரி கே.கோபால் ஈரோட்டில் ஆய்வு

08/May/2021 11:26:24

ஈரோடு மே:ஈரோடு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மற்றும் கால்நடைத்துறை முதன்மை செயலர் கே.கோபால், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ஆட்சியர்  சி.கதிரவன் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

ஈரோட்டில்  செய்தியாளர்களிடம்  கண்காணிப்பு அதிகாரி கே.கோபால் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை, மருத்துவமனை, பரிசோதனைகள், ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கப்பட்ட குடோன்களில் ஆய்வு செய்தோம்.

ஆக்சிஜன் கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில், படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு உள்ளன. உயர் தர சிகிச்சை வழங்கப்படுவதால், இங்கு 3,615 மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய பரவலை, முககவசம் அணிதல், விதிகளை கடைபிடித்தல் மூலமே தடுக்க முடியும். தற்போது, 2,435 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

பின்னர், ஆட்சியர்  சி.கதிரவன் கூறியதாவது: பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 550 படுக்கை ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளது. அங்கு, 50 படுக்கை காலியாக உள்ளன. பிற அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனைகளில், 1,900 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளது. இவற்றில், 200 படுக்கை காலியாக உள்ளன.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள தேசிய காஸ் நிறுவனத்தில் தினமும், 30 டன் உற்பத்தி செய்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். தனியாரிடம், தினமும், 3 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம். மேலும், 400 சிலிண்டர் தயாராக வைத்துள்ளோம்.

நேற்று வரை, 1.47 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம், 1,500 தடுப்பூசி வந்தன. அவற்றை உடன் போட்டுள்ளோம். கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். என்றார்  ஆட்சியர். இதில், எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Top