logo
 கோபிச்செட்டிபாளையம் தொகுதியில்   ரூ.32.95 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல்

கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் ரூ.32.95 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல்

26/Dec/2020 06:08:07

ஈரோடு டிச: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில்   பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ரூ.32.95 லட்சம் மதிப்பிலான திட்டங்களை புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு 52,000 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 36,000 மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் ஒருவரோடு ஒருவர் ஆலோசனை மேற்கொண்டு, எதிர்காலத்தில் நம்முடைய கல்வி முறையை இந்தியாவிற்கே வழிகாட்டியாக உருவாக்குவதற்கு மடிக்கணினிகள் தான் முக்கியப் பங்காற்றும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

 இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாவக்காட்டுப் பாளையத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அண்ணாநகர் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3.56 லட்சத்தில் பேவர்பிளாக் தளம் அமைக்கும் பணிக்கும், காராப்பாடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.8.87 லட்சத்தில்  வடிகால் அமைக்கும் பணி.

 காராப்பாடியில்  ரூ.7.45 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், ரூ.3.53 லட்சத்தில்  பேவர்பிளாக் தளம் அமைக்கும் பணிக்கும், ரூ.5.98 லட்சத்தில்  கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், ரூ.3.56 லட்சத்தில்  பேவர்பிளாக் தளம் அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.32.95 லட்சம் மதிப்புள்ள  புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top