logo
சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு நாள்: புதுக்கோட்டை காவல்துறை சார்பில்  ஆலோசனைக் கூட்டம்

சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு நாள்: புதுக்கோட்டை காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

28/Jun/2021 03:40:36

புதுக்கோட்டை,ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட  காவல் அலுவலகத்தில் நடைபெற்ற  சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு நாளையொட்டி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா பார்த்திபன் தலைமையில் பல்வேறு துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம், வனத் துறையினர், மீன்வளத்துறையினர். போதை பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு துறையினர், விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள்  உள்ளிட்ட சங்க நிர்வாகிகளை  அழைத்து, கடலில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் உள்ள மீனவர்களின் பங்கு குறித்து விவாதிக்கப் பட்டது.

கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக கடத்தப்படும் கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.  இக்கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், கோட்டைபட்டிணம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top