logo
புதிய கட்டுப்பாடுகள் அமல்- ஈரோட்டில்  காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய கூட்டம்

புதிய கட்டுப்பாடுகள் அமல்- ஈரோட்டில் காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய கூட்டம்

06/May/2021 03:33:25

ஈரோடு, மே: புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் ஈரோட்டில்  காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம்  அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் இரவு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக் கப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மேலும் புதிய கட்டுப்பாடுகைளை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி ஏப்.6 முதல் வரும் 20-ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. காய்கறி, மளிகை, டீ, இறைச்சி கடைகள், மீன் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கியது. மற்ற அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காலை 6 மணிக்கு பெரிய மார்க்கெட்டுக்கு வந்து தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். இதேபோல் உழவர்  சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக வே இருந்தது.

 இந்நிலையில் ஏப்6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் வரும் 20-ஆம் தேதி வரை தினசரி சந்தையில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை நம்பியுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதேபோல் மளிகை கடைகளிலும் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Top