logo
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 4  கடைகள் பூட்டி சீல் வைப்பு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 4 கடைகள் பூட்டி சீல் வைப்பு

27/Apr/2021 02:42:53

ஈரோடு, ஏப்: ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத  நடைமுறைகளைப் பின்பற்றாதகடைகள் பூட்டி சீல் வைத்து அதிகாிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில்  கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும் மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டும்  வருகிறது.

மேலும் மாநகர் பகுதிக்குள் பட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள்வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து  கடைகளுக்கு அபராதத்துடன் கடையைப் பூட்டி சீல் வைத்தும் வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட உதவி  செவ்வாய்க்கிழமை ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ஈரோடு  பேருந்து  நிலையம், நாச்சியப்பா வீதி, மேட்டூர் சாலை, சக்தி சாலை , மீனாட்சிசுந்தரனார் சாலை உள்பட பகுதிகளிலும் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 அப்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஒரு ஹோட்டலுக்கு ரூ 5,000 அபராதம் விதித்து, அந்த ஹோட்டல் சீல் வைக்கப்பட்டது. இதைப்போல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததேநீர் கடைகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம்  அபராதம் விதித்தும் இந்த மூன்று தேனீர்  கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டதுஇதுபோல் ஒரு  டாஸ்மாக் கடைக்கு ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஒரு மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இதைப்போன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மற்ற மூன்று மண்டலங்களிலும் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுஇந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், சுகாதார ஆய்வாளர் கண்ணன், உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Top