logo
 அரசு மருத்துவமனைகளில்  பணியாற்றும் பல்வேறு பிரிவு மருத்துவர்களுக்கு  ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவித்துள்ளது

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்வேறு பிரிவு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவித்துள்ளது

19/Jun/2021 12:50:24

சென்னை, ஜூன்: அரசு மருத்துவமனைகளில்  பணியாற்றும் பல்வேறு பிரிவு மருத்துவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை  ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்அரசு மருத்துவமனைகளிள் பல்வேறு மருத்துவப்பிரிவுகளில்  பணியாற்றும்  மருத்துவர்களுக்கு பல்வேறு மருத்துவர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.

 

அதன்படி,  (1). மருத்துவ நிபுணர் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்.(2). கடினமான பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர். (3). செயல்பாட்டு  ரீதியாக கடினமான நிலைகளில் பணியாற்றும் மருத்துவர் என மூன்று பிரிவுகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களுக்கு  பின்வரும் கல்வித் தகுதியுள்ள மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.

 

முதுகலை டிப்ளோமா  அனைத்து சிறப்பு பிரிவுகள் படித்தவர்களுக்கு  ஒரு சிறப்பு ஊதிய உயர்வும். முதுகலை பட்டம் படித்த (எம்டி-எம்எஸ்) வர்களுக்கு   இரண்டு சிறப்பு ஊதிய உயர்வும், சிறப்பு நிபுணர்கள் (டிஎம்-எம்சிஹெச்) களுக்கு இரண்டு கூடுதல்  ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. இந்த உயர்வு  ஊதிய நிர்ணயம், அகவிலைப்படி மற்றும் ஓய்வுதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

இதில்மருத்துவ நிபுணர் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு மாதம் ரூ.14,000. முதுகலை பட்டம்   (11 வகையான பற்றாக்குறை பிரிவுகளில்படித்தவர்களுக்கு ரூ.9000.  பற்றாக்குறையில்லாத பிரிவு முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு  ரூ.5,500. முதுகலை டிப்ளமோ (11 வகையான பற்றாக்குறை  பிரிவுகளில்) படித்தவர்களுக்கு ரூ.5000.

முதுகலை டிப்ளமோ(பற்றாக்குறையில்லா பிரிவுகளில்) படித்தவர்களுக்கு ரூ.3000.  மேலும், மருத்துவ அலுவலர்கள்( நிபுணர் மற்றும் சிறப்பு நிபுணர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடினமான மலைப்பகுதி, மற்றும் தொடர்புக்கு அப்பால் உள்ள தரைப்பகுதிகளில்  பணியாற்றுபவர்களுக்கு  ரூ.3000. விபத்து காயம், தீவிர சிகிச்சை, நோயுற்ற குழந்தைகள் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையம்  ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு ரூ.3000. வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

Top