logo
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

27/Apr/2021 02:17:11

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசிகள் முன் களப்பணியாளர்கள், மட்டும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் போடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்க ளப்பணியாளர்களுக்கும், 1.18 லட்சம் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும்  ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மண்டலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 2452 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் நேற்று வரை 1050 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கோபி மற்றும் ஈரோடு -1 கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் 112 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமினை ஈரோடு மண்டல பொது மேலாளர் கணபதி தொடங்கி வைத்தார். கிளை மேலாளர்கள் அர்ஜுனன், நல்லசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (போக்குவரத்து) புவியரசு மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top