21/Jun/2021 10:51:45
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவை பயில்வோம் கொரோனவை கொல்வோம் என்ற தலைப்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், யோகா பயிற்சியாளர் ராமதாஸ் பங்கேற்று மூச்சுப்பயிற்சி,
சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை
அளித்தார்.
இதில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று
யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் சர்வதேச
யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில்
யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.