logo
அரிமளம் அருகே 13 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

அரிமளம் அருகே 13 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

27/May/2020 03:24:36

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே 13 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 அரிமளம் அருகேயுள்ள  சீகப்பட்டியைச் சேர்ந்த கே.காசிநாதன். விவசாயியான இவர், அப்பகுதியில் உள்ள அழிஞ்சி கண்மாய் கரையோரம் அவருக்கு சொந்தமான வயலில் நெல் சாகுபடி செய்துள்ளார். நெற்பயிர்களை சேதப்படுத்திய எலிகளைக் கட்டுப்படுத்த வரப்போரம் நெல்லில் விஷம் கலந்து வைத்துள்ளார். 

 இந்திலையில்,  அப்பகுதியில் சுற்றித்திரிந்த  13 மயில்கள் விஷம் கலந்த நெல்லை தின்று உயிரிழந்தன. 

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருமயம் வனச்சரக அலுவலர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள், விஷம் வைத்து மயில்களை கொன்ற காசிநாதனை கைது செய்தனர்.


Top