logo
பிப்.14-இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில அரசு ஆலோசனை

பிப்.14-இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில அரசு ஆலோசனை

10/Feb/2021 08:38:10

சென்னை, பிப்: அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம் வருவதை முன்னிட்டு, பலத்தப் பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் புதன்கிழமை  நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உள்பட, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Top