27/Apr/2021 03:56:31
ஈரோடு ஏப்: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சென்னிமலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளோடு, கருக்கங்காட்டு வலசு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளரும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான சு .முத்துச்சாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
சென்னிமலை வடக்கு ஒன்றிய துனைசெயலாளர் முருகேசன், சென்னிமலை ஊராட்சி மன்ற
தலைவர்
காயத்திரி இளங்கோவன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.