logo
20 சதவீத போனஸ் வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

20 சதவீத போனஸ் வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

10/Nov/2020 12:00:29

ஈரோடு:அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20சதவீதம் போனஸ் வழங்க கோரி ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சென்னிமலை சாலையில்  உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை 9.11.2020 -அன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட பொதுசெயலாளர் குழந்தைசாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் ஜான் கென்னடி முன்னிலை வகித்தார். இதில், 2019-2020-ஆம் ஆண்டுக்கான 10சதவீத போனஸ் அறிவிப்பினை அரசு திரும்ப பெற வேண்டும். தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி 20 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும். 

பண்டிகை முன் பணம் ரூ.10ஆயிரம் உடனே வழங்க வேண்டும். 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுசெயலாளர் திருமுருகன், டி.டி.எஸ்.எப். மாநில பொருளாளர் குணசேகரன், ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட பொதுசெயலாளர் ஜெயராமன், தொ.மு.ச. செக்கீங் இன்ஸ்பெக்டர் சங்க தலைவர் தமிழ்செல்வன் மற்றும் எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Top