logo
விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறியாளர்களின் ஒரு வார வேலை நிறுத்தம் வாபஸ்: நூல் விலை உயர்வால் அதிர்ச்சி

விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறியாளர்களின் ஒரு வார வேலை நிறுத்தம் வாபஸ்: நூல் விலை உயர்வால் அதிர்ச்சி

28/Dec/2020 05:43:43

ஈரோடு டிச : ஈரோடு மாவட்டத்தில், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூலை போன்ற பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் பிரயாணிகள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

 ஈரோட்டில் தினமும் 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நூல் விலை நிலையாக இல்லாமல் உயர்ந்த படியே இருந்தால் விசைத்தறி யாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மாதம் ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உற்பத்தியை  நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

 இதனால், ரூ 40 கோடி மதிப்பில் ஒரு கோடியே 75 லட்சம் மீட்டர் துணி தயாரிப்பு பாதிக்கப்பட்டது ஒருவாரம் வேலை நிறுத்தத்திற்கு பின் விசைத்தறிகள் மீண்டும் நேற்று முதல் ஓட தொடங்கியது இந்நிலையில் நூல் விலை காட்டன் நூல் விலையை உயர்த்தி இருப்பது விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 இதுகுறித்து, ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்க செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது: தீபாவளி பண்டிகையின் போது ஒரு கிலோ ரயான் நூல் ரூ 150 -க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதை கண்டித்து தயாரிப்பு நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது ஒரு வாரம் பத்து நாள் ரூ.40 கோடி மதிப்பிலான ஒரு கோடியே 70 லட்சம் மீட்டர் துணி தயாரிப்பு பாதிக்கப்பட்டது ஆனால் போராட்டம் நடத்தும்.

 இந்த வாரத்தில் 100 கிலோவுக்கு ரூ 22 வரை உயர்ந்துள்ளது அதாவது கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.172-க்கு விற்பனையான ராயல் இந்த வாரம் சனிக்கிழமை கிலோ ரூ. 194 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் காட்டன் நூல் விலை ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ 50 வரை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ ரூ. 185 விற்கப்பட்ட காட்டன் நூல் இந்த மாதம் ரூ. 235 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே விசைத்தறியாளர்கள் கடும் லட்சத்தில் இருக்கும் சூழ்நிலையில் நூல்களின் விலை உயர்வு மேலும் அதிகரிப்பது பேரிடியாக உள்ளது. எனவே மாதம் ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Top