24/Apr/2021 06:18:11
சென்னை, ஏப்: வரும் திங்கள்கிழமையிலிருந்து(ஏப்.26) வணிக வளாகங்கள், திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் இயங்கத்தடை விதித்தும், வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங் களை மூட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித் துள்ளது.
மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்கெனவே அனுமதித்திருந்த 100 பேர் என்ற எண்ணிக்கை 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். வெளிமாநிலங்களில் தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். மால்கள் அதிலுள்ள கடைகளுக்கும் அனுமதி இல்லை.
அனைத்து உணவகங்களில் தேனீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட தடை. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமை முதல் அமலாகிறது. கடந்த ஆண்டில் கொரோனா காலத்தில் அறிவித்ததைப் போன்ற கட்டுப்பாடு கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.