logo
கலவை முறையில் வாக்குப்பதிவு, இயந்திரங்கள் பிரித்து  6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைப்பு

கலவை முறையில் வாக்குப்பதிவு, இயந்திரங்கள் பிரித்து 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைப்பு

10/Mar/2021 03:52:02

புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்றத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தலைமையில் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் கலவை முறையில்  தேர்வு செய்து மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளுக்கும் புதன்கிழமை பிரித்து  அனுப்பி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங் கள் ஆகியவை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1902 வாக்கு பதிவு மையங்கள்  அமைக்கப்படுள்ளன.6 சட்டமன்ற தொகுதியிலும் 3467 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2528 கண்ட்ரோல் யூனிட்டுகள் 2724 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படஉள்ளன 

6 சட்டமன்ற தொகுதியிலும் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட்டுகள் விவிபாட் இயந்திரங்கள் கம்ப்யூட்டர் மூலமாக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்.

சுழற்சி முறையில் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

Top