logo
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 435 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 435 வாகனங்கள் பறிமுதல்

27/May/2021 11:08:05

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தேவையற்ற காரணங்களைக் கூறிக் கொண்டு சாலையில் பயணித்தவர்களிடம் இருந்து 430 இருசக்கர வாகனங்கள் 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து போலீஸார்  வழக்கு பதிவு செய்தனர்.


தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த (மே.24)திங்கள்கிழமை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இருப்பினும் தேவையற்ற காரணங்களைக் கூறிக் கொண்டு சிலர் சாலையில் சுற்றித்திரிந்து  வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேவையற்ற காரணங்களைக் கூறிக் கொண்டு சாலையில் செல்லும்  நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை தேவையற்ற காரணங்களைக் கூறிக் கொண்டு சாலையில் பயணித்தவர்களிடம் இருந்து 430 இருசக்கர வாகனங்கள் 5 நான்கு சக்கர வாகனங்களை சத்தியமங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Top