logo
ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

08/Apr/2021 10:32:00

ஈரோடு ஏப்ரல்:  ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சி.கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியும், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கோபிச்செட்டிப்பாளையம் அரசு கலைக் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்  தேர்தல் முடிவுற்றவுடன்  8 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களின் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்  கொண்டு வரப்பட்டு தொகுதிவாரியாக தனித்தனி பாதுகாப்பு இருப்பு அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணும் மையான சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தலைமையில்  தேர்தல் பொதுபார்வயாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது வாக்குகள் எண்ணும் பகுதி, முகவர்கள் நுழையும் பகுதி, கட்டுப்பாட்டு அறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்ட குழுவினர் அனைத்துத் தொகுதி தேர்தல் அலுவலர்களும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக இருந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

Top