logo
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

30/Mar/2021 10:25:46

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சி  மற்றும்  புதுக்கோட்டை  ஒன்றியப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  கே.கே.. செல்லபாண்டியன்ஆலோசனைப்படி, புதுக்கோட்டை நகர செயலர் க. நைனாமுகமது  தலைமையில்  நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி திமுக  வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா  கீழ 4-ஆம் வீதி பெருமாள் கோயிலில் இருந்து  சைக்கிளில் தனது பிரசாரத்தை தொடங்கி நகராட்சியின்  17,18,19 மற்றும் 29  வார்டு பகுதிகளில் பயணித்து   வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து பிற்பகலில் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தலைமையில் வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட முக்காணிபட்டி, கண்டக்காரன்பட்டி, சின்னையாசத்திரம், கரையப்பட்டி, கீழக்காடு, வடக்கு செட்டியாபட்டி, தெற்கு செட்டியாபட்டி, கீழ காயாம்பட்டி உள்ளிட்ட 23 கிராமங்களில்.

  எம்.குளவாய்பட்டி ஊராட்சிக்குள்பட்ட  பி. மாத்தூர், ஏ. மாத்தூர், தொண்டைமான் விடுதி, குப்புடையான்பட்டி வடவாளம், இச்சடி கடைவீதி, மூக்கம்பட்டி, சம்பட்டிவிடுதி உள்ளபட 45 -க்கும் மேல்பட்ட  கிராமங்களில் திமுக வேட்பாளர் வை.முத்து ராஜா வாக்கு சேகரித்தார். இதில், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 


Top