logo
கொரோனா பரிசோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் அனுமதி: ஆட்சியர்

கொரோனா பரிசோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் அனுமதி: ஆட்சியர்

22/Apr/2021 09:32:37

புதுக்கோட்டை, ஏப்: கொரோனா பரிசோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்துக்குப்பின் அவர்  கூறியதாவது: 

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும்  முகவர்கள்; வேட்பாளர்கள்  அரசு அலுவலர்கள்  காவல்துறையினர் உள்பட அனைவருக்கும்  வருகிற 24 -ஆம் தேதி சம்பந்தப்பட்ட தேர்தல் நடததும்

அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி  போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து வேட்பாளர் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவலர்களுக்கு  ஆயுதப்படை மைதானத்திலும், அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்திலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அவர்கள்  அனைவருக்கும் வரும் 28, 29, 30 -ஆகிய தேதிகளில் ஆர்டி.பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.  இதன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வாக்கு  எணணும்  மையத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

  கொரோனா தடுபபு வழிமுறைகளின்படி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்படும். உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

 


Top