22/Apr/2021 09:53:36
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பகடுவான்பட்டி கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 7 பேரை வருவாய்த்துறை யினர் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி ஜெயா மற்றும் எல்லப்பன் அவரது மனைவி உமா மற்றும் இவர்களது குழந்தைகள் 3 பேர் உள்பட மொத்தம் 7 பேரும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பகடுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு தகவல் வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தொழிலாளர் துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கொத்தடிமை யாக வேலை பார்த்த சுரேஷ் அவரது மனைவி ஜெயா எல்லப்பன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேரையும் மீட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து 7 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். மேலும் 7 பேர் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிய தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் மேஸ்திரி மீது கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.