29/Oct/2020 09:18:23
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம், மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்துறை பொன்னமராவதி வட்டாரம் சார்பில் மண்வள அட்டை அடிப்படையி லான செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், மண் பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றியும் மண்வள அட்டை பெறப்படும் முறை பற்றியும் உயிரி உரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
பல்வேறு விவசாயம் சார்ந்த கேள்விகள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு பதிலளிக்கப்பட்டது.இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார்.வேளாண்மை அலுவலர் கவிதா,பாக்யலெட்சுமி,உதவி வேளாண் அலுவலர் மலர்விழி விவசாய குழு சந்திரன், மோகன்,அழகு ஆகியோர் கலந்து கொண்டனர்.