28/Sep/2020 04:30:29
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயலில் அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் பொன்னமராவதி ஒன்றிய அதிமு செயலாளர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் தேர்வு,புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.இதில் ஒன்றிய இணைச்செயலாளர் மோகனாசேகர், மாணவரணி ஒன்றிய செயலாளர் ஆலவயல் சரவணன்,இளைஞரணி ஒன்றிய செயலாளர் உரக்கடை பழனிச்சாமி,அதிமுக நிர்வாகி மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்