logo
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்  பிற 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பிற 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்

13/Mar/2021 05:45:14

புதுக்கோட்டை, மார்ச்: வாக்காளர் அடையாளஅட்டை இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை பின் வரும் 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைப்பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிட்ட தகவல்: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்  எதிர்வரும் 6.4.2021 அன்று நடைபெற உள்ளது. அன்று வாக்களிக்க செல்லும்   வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை  உறுதி செய்வதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்வதற்காக  பின்வரும் 11 வகையான மாற்று புகைப்பட அடையாள  ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்காளிக்கலாம்.

 ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை,வங்கி-அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய).தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை., ஓட்டுநர; உரிமம்,நிரந்தர கணக்கு எண் அட்டை  (PAN Card), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால்- வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் பாராளுமன்ற- சட்டமன்றஃசட்ட மேலவை உறுப்பினர;களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை  ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளித்து தவறாது தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.


Top