logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

16/Apr/2021 11:12:17

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை தேவையான அளவு கையிருப்பில் உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசி  போடும் பணியினை  நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தபின் மேலும் அவர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைககள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் தடுப்பூசி திருவிழாவை விளம்பரப்படுத்தும் வகையில் 11.4.2021 முதல் 14.4.2021 வரை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 4 வாகனங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வாகனங்களின் மூலம் கொரோனா தடுப்பூசி  குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் விதமாக  இந்தப் பிரசாரம்  வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 45 வயதிற்கு மேற்பட்டவா;கள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்  ஆய்வு செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு 2020 ஏப்ரல் 20-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்   முதல்  கொரோனா  நோயாளி கண்டறியப்பட்டதிலிருந்து  இன்று வரை மொத்தம் 12,000 -க்கும்  மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  96 சதவீதத்தும் மேற்பட்ட நோயாளிகள்  குணமடைந்துள்ளனர். கொரோனா நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடையலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதன்கிழமை 49 நபர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறி யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள்  தயார் நிலை யில் உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 323 நோயாளிகளில் 157  பேர் புதுக்கோட் டையிலுள்ள மருத்துவமனைகளிலும், 123  பேர்  வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும், 43  பேர்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு 70க்-கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் ஒவ்வொரு நாளும் 1500-க்கும் மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போன்று காய்ச்சல் முகாம்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் பொது மக்களிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளின் செயல் திறன் மற்றும் எதிர்ப்பு சக்தியும் எவ்வித வேறுபாடின்றி சம அளவிலேயே உள்ளன.  இரண்டு தடுப்பூசிகளாலும் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே தகுதியுள்ள அனைவரும் இந்த இரண்டு தடுப்பூசி களில் ஒன்றினை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தேவையான அளவு  கொரோனா  தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளன என்றார்  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. 

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தடுப்பூசி திருவிழாவையொட்டி பொது சுகாதாரத்துறையின் 13 நடமாடும் வாகனத்தினையும், புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள் ளும் வகையில் 10 விளம்பர வாகனங்களையும் பார்வையிட்டார்.  

இந்த ஆய்வில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வப் பூவதி, இணை இயக்குநர் (ஊரகநலப் பணிகள்) ராமு, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், பொது சுகாதார துணை இயக்குநர்கள் பா. கலைவாணி, விஜயக்குமார், கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top