logo
ஈரோட்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளை எம்எல்ஏ- க்கள் திறந்து வைத்தனர்

ஈரோட்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளை எம்எல்ஏ- க்கள் திறந்து வைத்தனர்

22/Feb/2021 09:07:55

ஈரோடு, பிப்: ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட  அரசுபள்ளிகளை எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

 மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி, மஞ்சப்ப கவுண்டன்வலசு அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதே போல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய வலசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

இந்த தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 2021 -ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழா  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.   மாவட்ட கல்வி அதிகாரி மாதேஸ்சன் வரவேற்றார். எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம்,கே. எஸ். தென்னரசு  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்புகளை தொடங்கி வைத்தது மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வழங்கினர்.

 இதை தொடர்ந்து குமலன்குட்டையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை எம்எல்ஏ-க்கள் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து குமலன்குட்டை யில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வளைவை (ஆர்ச்) எம்எல்ஏ-க்கள் திறந்து வைத்தனர்.

பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ்,  ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், வீரப்பன்சத்திரம் பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், சூரம்பட்டி தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top