logo
 திமுக  ஆட்சிக் காலத்தில் ஏழை மக்கள் எந்த நலனும் பெறவில்லை: முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சிக் காலத்தில் ஏழை மக்கள் எந்த நலனும் பெறவில்லை: முதல்வர் பழனிசாமி

09/Feb/2021 06:31:11

ஏழை மக்கள் திமுக  ஆட்சிக் காலத்தில் எந்த நலனும் பெறவில்லை என்றார்  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  

ராணிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் மின்தடை ஏற்பட்டதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலத்திற்குச் சென்றது. அதிமுக அரசு பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மின் தடை இல்லாத மாநிலமாக உருவான. 25 சதவீதம் தொழில் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப் படுகிறது. அரக்கோணத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணி முடிந்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி தந்தது தமிழக அரசு. இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்திய அரசு தமிழக அரசு.

திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட மக்களுக்கு வழங்கவில்லை. ஏழை மக்கள் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக் காலத்தில் எந்த நலனும் பெறவில்லை. 70 வயது முடிந்த பின்னர் மக்கள் மீது அக்கறை கொள்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். பெட்டி வைத்து குறைகள் கேட்பவர் ஸ்டாலின்.

100 ஆண்டுகள் அதிமுக அரசு தான் நிலைக்கும். எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் பெட்டி வைத்து குறைகளைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 26 அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.

2010 ஆண்டில் திமுக காங்கிரஸ் தலைமையில் தான் நீட் தேர்வு கொண்டு வந்தார்கள்.இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அனைத்து துறைகளிலும் தமிழகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது என்று அவர் பேசியுள்ளார். நிகழ்ச்சி முடிந்து முதல்வர் பழனிசாமி வேலூர் புறப்பட்டுச் சென்றார். 

 

Top