logo
ஈரோடு மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தைவிட பட்டாசு வெடித்ததாக 35 வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தைவிட பட்டாசு வெடித்ததாக 35 வழக்குகள் பதிவு

15/Nov/2020 08:23:50

ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பட்டாசுதான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது பேதமின்றி வகைவகையான பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வர். ஆனால், பட்டாசுகளால் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர் ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை தெரிவித்தார்.


Top