logo
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. அதிகபட்சமாக வரட்டுப் பள்ளத்தில் 104 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. அதிகபட்சமாக வரட்டுப் பள்ளத்தில் 104 மி.மீ மழை பதிவு

16/Apr/2021 06:47:18

ஈரோடு, ஏப்:ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.அதிகபட்சமாக 110 டிகிரிக்கு மேல் வெயில் தகித்தது. வெயில் தாக்கம் காரணமாக பொது மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இரவு நேரங்களிலும் தூங்க முடியாமல் அவதி அடைந்து வந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புழுக்கத்தால்  அவதி அடைந்து வந்தனர். மேலும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

  இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் புறநகர்ப் பகுதியில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.ஆனால் காலை நேரங்களில் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிமுதல்ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும்பாலான  பகுதிகளில் பலத்த மின்னல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. 11  மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது.  

இந்த திடீர் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 104.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதைப்போல் கொடுமுடி பகுதியில் 100.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. பவானி, நம்பியூர், சென்னிமலை தாளவாடி பெருந்துறை அம்மாபேட்டை குண்டேரிபள்ளம் பவானிசாகர் ஈரோடு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது.


 அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைப்போல் கொடுமுடியில் நேற்று இரவு பெய்த தொடங்கிய மாலை அதிக காலை வரை வெளுத்து வாங்கியது. பவானி, நம்பியூர் சென்னிமலை போன்ற பகுதிகளிலும் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. 

இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அதைத் தொடர்ந்து இரவு 9 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. 

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.பின்னர் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இரவு 11 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது பின்னர் 12 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. அதிகாலை 4  மணி வரை மழை கொட்டித்தீர்த்தது.

 மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்ப நிலை மாறி குளிர்ந்த காற்று வீசி வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில்  அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் பகுதியில்  104.6 மிமீ, கொடுமுடியில்  100.6 மிமீ. குறைந்த பட்சமாககொடிவேரியில்  12.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Top